பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்!

 

பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவச் சேர்க்கை, கலந்தாய்வு என அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பொறியியல் கலந்தாய்வு: இன்று மாலை முதல் விண்ணப்பிக்கலாம்!

அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிட்ட அவர் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆன்லைன் மூலமே சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்றும் பொறியியல் மாணவ சேர்க்கைக்கு 52 உதவி மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் சேர்க்கை குறித்த அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என்றும் ஆகஸ்ட் 15க்குள் பொறியியல் கவுன்சிலிங்கை முடிக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறினார். அதே போல கல்லூரிகள் கொரோனா தனிமை முகாம்களாக இருப்பதால் இப்போதைக்கு திறக்க வாய்ப்பு இல்லை என்றும் கலை, அறிவியல் படிப்புகள் குறித்து 2 நாட்களில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது நினைவு கூரத்தக்கது.