பைக் ஆசை… குறிவைக்கப்பட்ட பிசினஸ்மேன்கள்… சென்னை தொழிலதிபரை பதறவைத்த இன்ஜினீயரிங் மாணவர்

 

பைக் ஆசை… குறிவைக்கப்பட்ட பிசினஸ்மேன்கள்… சென்னை தொழிலதிபரை பதறவைத்த இன்ஜினீயரிங் மாணவர்

போட்டோவை மார்பிங் செய்து சென்னை தொழிலதிபரை மிரட்டிய இன்ஜினீயரிங் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பைக் ஆசையில் இப்படிப்பட்ட வேலைகளை செய்து வருவதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் வடிவேல், ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில், “முகப்பேரில் கடந்த 5 ஆண்டுகளாகக் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். எனது ஃபேஸ்புக்கிலிருந்து என்னுடைய செல்போன் நம்பரை எடுத்து என்னை ஒருவர் ஒருவர் தொடர்புகொண்டார். தனக்கு 5 லட்சம் ரூபாய் தர வேண்டும். இல்லையெனில் உங்களின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுவிடுவேன். போலீஸுக்குச் சென்றால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டினார். 9.6.2020 அதிகாலையில் என் வீட்டுக்கு வந்தான். நான் பயந்து போய் என் மகளின் மூன்றரை சவரன் வளையல், ஒன்றரை சவரன் செயின் முக்கால் சவரன் கம்மல் என 42 கிராம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொடுத்தேன். என்னைத் தொடர்ந்து அவன் மிரட்டி வருகிறான். எனவே, மேற்படி நபர் மீது நடவடிக்கை எடுத்து அவனிடம் உள்ள தங்க நகைகளை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

பைக் ஆசை… குறிவைக்கப்பட்ட பிசினஸ்மேன்கள்… சென்னை தொழிலதிபரை பதறவைத்த இன்ஜினீயரிங் மாணவர்

இந்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர், வடிவேலுவை மிரட்டியது புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்த ஆல்வின் (20) எனத் தெரியவந்தது. இவர் டிப்ளோமா இன்ஜினீயரிங் படித்து வருகிறார். இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், தங்க நகைகளை மீட்டனர். பின்னர் அவர் அளித்த வாக்குமூலத்தில், “விலை உயர்ந்த பைக் வாங்க வேண்டும் என்ற ஆசை நீண்டகாலமாக எனக்கு இருந்தது. ஆனால், பணம் இல்லை. அதனால்தான் ஃபேஸ்புக் மற்றும் சமூகவலைதளங்களில் வசதியானவர்களைக் குறிவைத்து அவர்களின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து செல்போன் நம்பருக்கு அனுப்புவேன். அதைப்பார்த்து பயப்படுபவர்களிடம், முடிந்தளவுக்கு பணம் நகைகளை பறிப்பேன்” என்று கூறியுள்ளார்.

பைக் ஆசை… குறிவைக்கப்பட்ட பிசினஸ்மேன்கள்… சென்னை தொழிலதிபரை பதறவைத்த இன்ஜினீயரிங் மாணவர்

“பிசினஸ் செய்து வரும் வடிவேலு, ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருந்துள்ளார். தன்னுடைய புகைப்படங்களை அதில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்களை ஆல்வின் எடுத்து மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி வைத்துள்ளதோடு, பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்றனர் காவல்துறையினர்.