ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தார் … மனைவியை பிரிந்தார் … மேட்ரிமோனியல் அஸ்திரம்!- `நான் அவன் இல்லை’ படப் பாணியில் இளம்பெண்களை குறித்து மோசடி செய்த பட்டதாரி வாலிபர்

 

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தார் … மனைவியை பிரிந்தார் … மேட்ரிமோனியல் அஸ்திரம்!- `நான் அவன் இல்லை’ படப் பாணியில் இளம்பெண்களை குறித்து மோசடி செய்த பட்டதாரி வாலிபர்

வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை ஆன் லைன் விளையாட்டில் இழந்த பட்டதாரி வாலிபர், மனைவி பிரிந்து சென்ற விரக்தியில்  `நான் அவன் இல்லை’ படத்தை பார்த்து மேட்ரிமோனியல் மூலமாக பல பெண்களை ஏமாற்றி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

சென்னை திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்தவர் ராகேஷ் சர்மா (36). பொறியியல் பட்டதாரியான இவர் , கடந்த 2015 ஆம் ஆண்டு சீனியர் அளவிலான சர்தேச கபடி போட்டியில் பங்கேற்றுள்ளார். இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர். இந்த நிலையில், கொடுங்கையூரில் வசிக்கும், முன்னாள் ராணுவ வீரரின் மகள் ஷிவானி (பெயர் மாவட்டம்), திருமண வரன் பார்க்கும் வலைதளம் மூலம் தன்னை ராணுவ வீரரின் மகன் என அறிமுகமாகி தான் ஒரு ஆராய்ச்சியாளர் என  கூறியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தார் … மனைவியை பிரிந்தார் … மேட்ரிமோனியல் அஸ்திரம்!- `நான் அவன் இல்லை’ படப் பாணியில் இளம்பெண்களை குறித்து மோசடி செய்த பட்டதாரி வாலிபர்

அவரை, திருமணம் செய்துக் கொள்வதாக, ஆசை வார்த்தை கூறி, ஷிவானியிடம் இருந்து, 5.5 லட்சம் ரூபாய் பணம், 22 சவரன் நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக தனது ஆராய்ச்சிக்கு தேவை  எனக்கூறி வாங்கியுள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த ஷிவானி, தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதையடுத்து, தனது மகள், ராகேஷ் சர்மாவால் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டு புளியந்தோப்பு சரக காவல் துணை ஆணையர் ராஜேஷ்கண்ணாவிடம் முறையிட்டுள்ளார். அப்போது அவர், உங்கள் மகளின் பெயரையோ மற்ற விவரங்களையோ வெளியே தெரிவிக்கமாட்டோம். தைரியமாக புகார் அளியுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஷிவானியின் தந்தை புகார் அளித்தார். இதையடுத்து, உதவி ஆணையர் ஹரிக்குமார் மற்றும் காவல் ஆய்வாளர் ஆபிரஹாம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, ராகேஷ், ஷிவானியை போனில் அழைத்து ஊரடங்கு காரணமாக வங்கியில் உள்ள பணத்தை எடுக்கமுடியவில்லை எனவும், உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளான்.  காவல்துறையினரின் அறிவுறுத்தல் படி, மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானா அருகே வந்து பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு, ஷிவானி கூறியுள்ளார். நேற்று காலை அங்கு அந்த பெண்ணுடன் சென்ற காவல்துறையினர், பணம் வாங்க வந்த, மோசடிக்காரன் ராகேஷ் சர்மாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். கைதான, ராகேஷ் சர்மாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரனையில், பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தார் … மனைவியை பிரிந்தார் … மேட்ரிமோனியல் அஸ்திரம்!- `நான் அவன் இல்லை’ படப் பாணியில் இளம்பெண்களை குறித்து மோசடி செய்த பட்டதாரி வாலிபர்

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், “ராகேஷ் சர்மா பொறியியல் மட்டுமில்லாமல் ரோபடிக்கிலும் பட்டப்படிப்பு படித்துள்ளார். ராகேஷ் சர்மா, சங்கீதா என்ற பெண்ணுடன்  கடந்த 2019ஆம் ஆண்டு  திருமணமாகி 3 மாதத்தில் குழந்தை உள்ள நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கருத்துவேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து விட்டார். 2015 ஆம் ஆண்டு  கத்தார் நாட்டில் வேலை பார்த்து வந்த அவர், கடந்த 2019 ஆண்டு சென்னை திரும்பியுள்ளார். வந்த உடனே பெற்றோர்கள் வரன்பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.  சம்பாதித்த பணத்தை ஆன் லைன் விளையாட்டான டீரீம் 11 இல் நிறைய பணத்தை இழந்துள்ளார். முதலில் அந்த விளையாட்டில் பணம் சம்பாதித்த நிலையில், அதன் மீது கொண்ட தீராத மோகத்தில் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்துள்ளார்.
பணத்தை இழந்த நிலையில், மனைவியும் பிரிந்து விட்டதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்ட அவர், தேர்ந்தெடுத்த வழியே மேட்ரிமோனியல் வழியாக விவாகரத்து ஆன பெண்களை குறிவைத்து பணம் பறிப்பது.  இதற்காக, ‘நான் அவன் இல்லை’ என்ற தமிழ்படத்தை 30 மேற்பட்ட முறை பார்த்துள்ளார். மேலும் அந்த படத்தில் வரும் கதாநாயகன் போலவே சிகை அலங்காரத்தை மாற்றியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்தார் … மனைவியை பிரிந்தார் … மேட்ரிமோனியல் அஸ்திரம்!- `நான் அவன் இல்லை’ படப் பாணியில் இளம்பெண்களை குறித்து மோசடி செய்த பட்டதாரி வாலிபர்

முதலில் வெளிநாடுகளில் உள்ள கணவரை பிரிந்த  தமிழ் பெண்களை  குறிவைத்து வலை வீசிய அவர், அபிதாபியை சேர்ந்த கணவரை பிரிந்த பெண்ணிடம் 3 சவரன் நகை, 8 ஆயிரம் பணத்தை வாங்கியுள்ளார். எளிதாக கிடைக்கவே அதனை தொடர்ந்துள்ளார். தனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் எனவும் தான் ஒரு ஆராய்ச்சியாளர் எனவும் பெண்களிடம்  அறிமுகப்படுத்தியுள்ளார். தன்னை உதாசீனபடுத்திய தனது மனைவிக்கு பெண்கள் அவரின் வலையில் விழுந்த பெண்களை பற்றி தகவல்களை தெரிவித்து பெருமைப்பட்டு, நீ இல்லையேல் 100 பெண்கள்” என கூறியுள்ளார்.

இதுபோல் சிங்கப்பூர், மலேசியா, திருச்சி மற்றும் சென்னையில் வளசரவாக்கம், கோடம்பாக்கம், கொடுங்கையூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை வாங்கி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. கைதான மோசடி மன்னன் ராகேஷ்சர்மாவிடம், இதுபோல் எத்தனை பெண்கள் ஏமாந்து உள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். பெண்களை ஏமாற்றி பறித்த பணத்தில் ஒரு காரும், உயர் ரக இருசக்கர வாகனத்தையும் வங்கியுள்ள அவர் மற்றவற்றை நிலமாகவும் வாங்கியுள்ளார். அவரிடம் இருந்து காரையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளோம்.

மேட்ரிமோனியல் போன்ற ஆன்லைன் திருமண தகவல் வெப்சைட்களில் வரண் தேடும் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும். ஒருவரின் சுயவிவரப் புகைப்படங்களை வைத்தே அவரை பற்றி தெரிந்துகொள்ளலாம். புகைப்படம் இல்லாத கணக்குகளை தவிர்கவேண்டும். அதிகமாக எடிட் செய்யப்பட்டுள்ள புகைப்படங்களை கொண்ட கணக்குகளையும் தவிர்த்தவேண்டும் . கணக்கில் உள்ள முழு விவரங்களை முழுமையாக ஆராய வேண்டும். ஏதாவது ஒரு விசயம் தவறாக தோன்றும் பட்சத்தில் அதனை தவிர்த்திட வேண்டும். போலி கணக்கில் உள்ள நபர் தன்னை குறித்த விவரங்களை அடுத்தவர்களை கவர அடிக்கடி மாற்றி கொண்டே இருப்பார். குறிப்பாக பொழுதுபோக்கு, பணி, படிப்பு, ஜாதி போன்ற விவரங்கள் மாறுவது போல தோன்றினால் அது போலி கணக்கு என்பதை உணர்ந்து பெண்கள் விலகியே இருக்கவேண்டும். குறிப்பாக மேட்ரிமோனியத்தில்  அறிமுகமாகி தனிப்பட்ட முறையில் பேசவும், சந்திக்கவும், அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யாதீர். நல்ல புரிதல் வரும் வரை இடைவெளியோடு மேட்ரிமோனியல் போன்ற இணையதளங்களிலே பேசிகொள்வது நல்லது. பேசிய சில நாட்களிலே அந்த நபர் பண உதவியை நாடுகிறார் என்றார் அவர் பணம் பறிக்கும் பேர்வழி என்பதை அறிந்துகொண்டு பாதுகாப்போடு இருக்கவேண்டும். விசாரணை செய்யும் பொழுது பல பெண்களின் செல்போன் அழைப்புகள் ராகேஷ் சர்மாவுக்கு வந்தது. அவர்களிடம் இவர் ஒரு மோசடி பேர் வழி என்று கூறினோம். இவரிடம் ஏமாற்றப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தனர்.