`பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 16ல் திறக்கணும்; 30ல் கலந்தாய்வை முடிக்கணும்!’- ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு

 

`பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 16ல் திறக்கணும்; 30ல் கலந்தாய்வை முடிக்கணும்!’- ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு

என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் என்று ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ளது.

`பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 16ல் திறக்கணும்; 30ல் கலந்தாய்வை முடிக்கணும்!’- ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில், கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனிடையே, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் (ஏ.ஐ.சி.டி.இ.) 62-வது கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் எப்போது வகுப்புகளை தொடங்கலாம்? என்பது குறித்த தகவல்களை ஏற்கெனவே வெளியிட்டு இருந்த அட்டவணைக்கு மாற்றாக புதிய அட்டவணையை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ளது.

அந்த புதிய அட்டவணையில், “பல்கலைக்கழகங்கள் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்காக அங்கீகாரத்தை ஜூலை 15-ந்தேதிக்குள் வழங்கவேண்டும். என்ஜினீயரிங் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றை ஆகஸ்ட் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2-ம் கட்ட கலந்தாய்வு, மாணவர் சேர்க்கை மற்றும் இடங்கள் ஒதுக்கீடு என்பது செப்டம்பர் 10-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். மொத்தத்தில் காலியாக இருக்கும் இடங்களில் மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடித்துவிடவேண்டும்.

`பொறியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 16ல் திறக்கணும்; 30ல் கலந்தாய்வை முடிக்கணும்!’- ஏ.ஐ.சி.டி.இ அறிவிப்பு

ஏற்கெனவே என்ஜினீயரிங் படிப்புகளில் உள்ள மாணவர்களுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் 16-ந்தேதி தொடங்கலாம் (பழைய அட்டவணையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது). புதிதாக என்ஜினீயரிங் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கலாம். தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் உள்ள முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலை சான்றிதழ் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 15-ஆம் தேதி தொடங்கலாம். இந்த படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு கடைசி தேதி ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஆகும். நடப்பாண்டு கல்விக்காலம் என்பது ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி வரை இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழக உயர்கல்வித்துறை அதிகாரிகளோ, ‘இதுகுறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இன்னும் ஒருவாரத்தில் அதுதொடர்பாக ஆலோசித்து அறிவிப்பு வெளியிடப்படும்’ என்கின்றனர்.