கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்த முதல்வர்… இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்!

 

கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்த முதல்வர்… இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்!

சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பேருந்து விபத்து நிகழ்ந்தது. பிப்ரவரி 17ஆம் தேதி உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு துக்கம் விசாரிக்க முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் சென்றுள்ளார். அப்போது ஓய்வெடுப்பதற்காக மாவட்டத்தில் விஐபிகள் தங்கும் பங்களாவில் சௌகான் தங்கியிருக்கிறார். எப்போதும் போல இரவில் படுக்கைக்குச் சென்ற அவருக்கு கொசுக்கள் பெரும் தலைவலியாக மாறியுள்ளன. கொசு தொல்லை தாங்க முடியாமல் பெட்ஷீட்டை போர்த்தி தூங்கிய அவரால் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை போலும்.

கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்த முதல்வர்… இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்!

நள்ளிரவு 2.30 மணிக்குப் பணியாளர்களிடம் கூறி கொசு ஸ்பிரே அடித்திருக்கிறார். சரி அதற்குப் பிறகாவது நிம்மதியாக தூங்கலாம் என்று நினைத்தவருக்கு அடுத்த தொல்லை தண்ணீர் மூலம் வந்துள்ளது. சரியாக 4 மணிக்கு தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் வந்துகொண்டே இருந்திருக்கிறது. இந்தச் சத்தமும் அவரை உறங்கவிடாமல் படுத்தி எடுத்திருக்கிறது. இதற்கும் பணியாளர்களை அழைத்தால் உள்ளுக்குள்ளே திட்டிவிடுவார்கள் என்று நினைத்த முதல்வர் தானே எழுந்து குழாயை அடைத்திருக்கிறார்.

கொசுக்கடியால் தூக்கத்தை தொலைத்த முதல்வர்… இன்ஜினியர்கள் சஸ்பெண்ட்!

இதனால் எரிச்சலடைந்த முதல்வர் அந்த பங்களாவுக்குப் பொறுப்பு வகித்த பொறியாளரையும் துணைப் பொறியாளரையும் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன்படி இன்று அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். பராமரிப்பு இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் பங்களாவை வைத்திருந்ததால் சஸ்பெண்ட் செய்தததாக அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.