Home விளையாட்டு கிரிக்கெட் வில்லியம்சன் பிளானை தவிடுபொடியாக்கிய ரூட் - டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!

வில்லியம்சன் பிளானை தவிடுபொடியாக்கிய ரூட் – டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!

இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 18ஆம் தேதி சௌதாம்ப்டனில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுடன் மோத நியூஸிலாந்துக்கு இது முக்கியவத்துவம் வாயந்த தொடராகக் கருதப்பட்டது. டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரராகக் களமிறங்கிய கான்வாய் இரட்டைச் சதம் அடித்து அசத்தினார்.

வில்லியம்சன் பிளானை தவிடுபொடியாக்கிய ரூட் - டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
வில்லியம்சன் பிளானை தவிடுபொடியாக்கிய ரூட் - டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!

அவருக்கு அடுத்தப்படியாக ஹென்ரி நிக்கோல்ஸ் 61 ரன்கள் எடுத்தார். இவர்களுக்குப் பின்னால் வந்த எந்த வீரர்களும் நிலையாக நிற்கவில்லை. எல்லோரும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இங்கிலாந்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்னிலும் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர். இறுதியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் சேர்த்திருந்தது.

Image

இதற்கடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 18 ரன்களுக்குள்ளாகவே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது ரோரி பர்ன்ஸுடன் கேப்டன் ரூட் கைகோர்க்க ஓரளவு அணியை சரிவிலிருந்து மீட்டனர். ரூட் 42 ரன்களில் பெவிலியன் திரும்பினாலும் ரோரி பர்ன்ஸ் நிலைத்து நின்றார்.

Image

அவருக்குப் பின்னால் வந்த லாரன்ஸ், ஜேம்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர். மீண்டும் இங்கிலாந்து அணிக்கு சோதனை வந்தது. ராபின்சன் ஓரளவு கைகொடுக்க பர்ன்ஸ் தனது சதத்தைக் கடந்தார். அவரும் நடையைக் கட்ட ஒற்றை ஆளாக பர்ன்ஸ் போராடிக் கொண்டிருந்தார். இறுதியில் அவரும் 132 ரன்களில் அவுட்டாக இங்கிலாந்தின் இன்னிங்ஸ் 275 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

Image

103 ரன்கள் முன்னிலையில் இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து அணி வீரர்களை சீரான இடைவெளியில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் தூக்கினர். இதனால் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆறு விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் வில்லியம்சன் டிக்ளேர் செய்தார். 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

Image

நியூஸிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடித்து எப்படியாவது டிரா செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே இங்கிலாந்து வீரர்கள் ஆடினர். அதன் பலனாக விக்கெட்டை இழக்காமல் மிகவும் பொறுமையாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். அதிகபட்சமாக சிப்லே 60 ரன்கள் எடுத்திருந்தார். 70 ஓவர் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை டிரா செய்தது. யார் வெற்றியாளர் என்பதைத் தீர்மானிக்கும் அடுத்த டெஸ்ட் போட்டி ஜூன் 10ஆம் தேதி தொடங்குகிறது.

வில்லியம்சன் பிளானை தவிடுபொடியாக்கிய ரூட் - டிராவில் முடிந்த முதல் டெஸ்ட்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews