நீரவ் மோடிக்கு சொந்தமான 2 டன் வைரங்கள், முத்து மற்றும் வெள்ளிகள் பறிமுதல்… இந்தியாவுக்கு கொண்டு வந்த அமலாக்கத்துறை…

நீரவ் மோடிக்கு சொந்தமான 2 டன் வைரங்கள், முத்து மற்றும் வெள்ளிகள் பறிமுதல்… இந்தியாவுக்கு கொண்டு வந்த அமலாக்கத்துறை…

பிரபல வைர வியாபாரியாக திகழ்ந்த நீரவ் மோடியும், அவரது மாமா மெகுல் சோக்சியும் மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ.15 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடினர். நீதிமன்றத்தால் அவர்கள் இருவரும் பொருளாதார குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். பண மோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் தப்பியோடிய அவர்கள் இருவரும் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்படுகிறார்கள்.

நீரவ் மோடிக்கு சொந்தமான 2 டன் வைரங்கள், முத்து மற்றும் வெள்ளிகள் பறிமுதல்… இந்தியாவுக்கு கொண்டு வந்த அமலாக்கத்துறை…

நீரவ் மோடி தற்போது இங்கிலாந்து சிறையில் உள்ளார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமையன்று நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு சொந்தமான வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து சுமார் 2,340 கிலோ அளவுக்கு பட்டை தீட்டப்பட்ட வைரம், முத்துக்கள், முத்து மற்றும் வெள்ளி நகைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இவற்றின் மதிப்பு சுமார் மொத்தம் ரூ.1,350 கோடியாகும்.

நீரவ் மோடிக்கு சொந்தமான 2 டன் வைரங்கள், முத்து மற்றும் வெள்ளிகள் பறிமுதல்… இந்தியாவுக்கு கொண்டு வந்த அமலாக்கத்துறை…

பறிமுதல் சரக்குகள் அனைத்தும் ஹாங்காங்கில் உள்ள சரக்கு போக்குவரத்து நிறுவனத்தின் குடோனில் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று அங்கியிருந்து 108 சரக்குகளும் மும்பை வந்தது. இந்த சரக்குகளில் 32 நீரவ் மோடிக்கும், 72 மெகுல் சோக்சிக்கும் சொந்தமானது. அந்த சரக்குகளை நீரவ் மோடி அதிகாரிகளை ஏமாற்றி துபாய்க்கு கடத்த திட்டமிட்டு இருந்தார் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சிக்கு பெரும் பின்னடைவாகும்.