• December
    13
    Friday

Main Area

Main



125  குழந்தையின் சாவுக்கு காரணமாக இருந்த ஒரே பழம்!

Litchi
Litchi

பீகாரில் மூளைக்காய்ச்சல் பாதிப்பால் கடந்த வாரங்களில் 125 குழந்தைகள் இறந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதற்கு காரணம் ஒரு பழம்தான் என்று வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பீகாரில் கோடைகாலத்தில் அதிகமாக விளையும் பழம் லிச்சி. இது உடலில் உள்ள சர்க்கரையின் அளவை வெகுவாக குறைக்கும் என கூறப்படுகிறது. மூளைக்காய்ச்சல் ஏற்படுவதற்கும் உடலில் சர்க்கரை அளவு குறைவதுதான் காரணம் என்பதால்  குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் வர லிச்சி பழம் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்களால் இது உறுதி செய்யப்படவில்லை. லிச்சி பழங்களை இரவில் உண்ண வேண்டாம் என பீகார் மாநில மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

2018 TopTamilNews. All rights reserved.