Home இந்தியா "சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?" - ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

“சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?” – ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!

சாக்கடையைச் சுத்தம் செய்யாமல் தாமதப்படுத்தியதால் அதற்கானஒப்பந்ததாரரின் தலையில் குப்பைகளைக் கொட்டி சட்டத்திற்குப் புறம்பான செயலில் ஈடுபட்டிருக்கிறார் சிவசேனா எம்எல்ஏ திலீப் லண்டே. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் திலீப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவர் சுத்தம் செய்யவில்லை என்றால் ஒப்பந்தத்தை ரத்துசெய்யாமல் ஏன் இப்படி செய்ய வேண்டும் என கேள்வியெழுப்பியுள்ளனர்.

"சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?" - ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!
Mumbai rains: Shiv Sena MLA Dilip Lande makes contractor sit on waterlogged  road, asks workers to dump garbage on him - Watch | Mumbai News | Zee News

தற்போது மும்பையில் தென்மேற்கு பருவமழை வெளுத்துவாங்கி வருகிறது. இச்சூழலில் இவரது தொகுதியான கண்டிவாலாவுக்குட்பட்ட பகுதிகளில் மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது. இதற்குக் காரணம் சாக்கடைகளை முறையாக தூர்வாராதது தான் காரணம் எனவும், இதனால் தொற்று அபாயம் ஏற்படலாம் என்றும் பொதுமக்கள் லண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Shiv Sena MLA tears off list with English names | DH Latest News, DH NEWS,  Latest News, India, NEWS , Maharashtra, Marathi

பணத்தை வாங்கி கொண்டு சாக்கடையைச் சுத்தம் செய்யாத ஒப்பந்ததாரரை சாலைக்கு இழுத்துவந்துள்ளனர் அவரது ஆதரவாளர்கள். அதற்குப் பின் அங்கு தேங்கியிருந்த குப்பைகளை அவர் மீது கொட்ட வைத்திருக்கிறார். எதுவும் செய்ய முடியாமல் அந்த நபர் பதற்றத்தில் அமைதியாக இருந்தார். பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடத்தில் அநாகரிமாக ஒருவரை நடத்துவது தான் எம்எல்ஏவுக்கு அழகா என கேள்வியெழுந்துள்ளது.

சர்ச்சைகளுக்குப் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது தொகுதிக்கு உட்பட்ட இந்தப் பகுதியில் கடந்த சில காலமாகவே சாக்கடை தேங்கியிருக்கிறது. குப்பைகளும் சரியாக அகற்றப்படாமல் இருப்பதே அதற்குக் காரணம். பருவமழையால் கழிவுநீரும் மழை நீரும் சேர்ந்து சாலைகளில் தேங்கியது. ஆனால், கடமையைச் செய்யவேண்டிய ஒப்பந்ததாரர்கள் இந்தப் பக்கமே வருவதில்லை. அதை உணரவே இந்தத் தண்டனையும் வழங்கினேன்” என்றார்.

"சாக்கடையை ஏன் சுத்தம் செய்யவில்லை?" - ஒப்பந்ததாரரின் தலையில் குப்பையை கொட்டிய எம்எல்ஏ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“நம்ம ஆட்டம் எப்போவும் வெறித்தனமா இருக்கும்” – இஸ்ரேல் வீராங்கனையை புரட்டியெடுத்த பி.வி. சிந்து!

எந்தவொரு விளையாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளாலும் இருந்தாலும் சரி சோதனைகளைத் தாண்டி சாதனைகளைப் பெறும்போது தான் நம்முடைய புருவத்தை விரிய வைப்பார்கள். இவர்களையா நாம் இவ்வளவு நாளும் கவனிக்காமல் விட்டோம்...

“என்னை காதலித்துவிட்டு வேறு பெண்ணை…” – வாசலில் காதலியால் நேர்ந்த விபரீதம்

காதலனின் திருமணத்தை நிறுத்த சென்ற காதலியை அடித்து உதைத்து சாலையில் வீசிய சம்பவம் நடந்துள்ளதுடெல்லியின் மகிபல்பூர் பகுதியில் வசிக்கும் 22 வயது பெண்ணொருவர் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்...

நண்பரின் தோட்டத்தில் 1455 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த பாஜக நிர்வாகி பிரகாஷ் கைது

தமிழ்நாட்டில் அடுத்த 2 மாதத்திற்குள் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை முற்றிலுமாக ஒழித்து அதன் விற்பனையை முழுமையாக தடுக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில்.. குன்னூர் பெண்மணியை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி!

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவது வழக்கம். அதன் படி, இம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று...
- Advertisment -
TopTamilNews