ரூ.2 கோடி செலவில் இணையத்தளம் தொடக்கம்; 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி!

 

ரூ.2 கோடி செலவில் இணையத்தளம் தொடக்கம்; 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி!

தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் இணையத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் https://www.tnskill.tn.gov.in/ என்ற இணையதளம் ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இதனை இன்று முதல்வர் பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொடக்கி வைத்தார். இந்த இணையதளத்தின் மூலமாக இணைய வழிச்சான்றிதழ்கள், ஆதார் எண் வருகைப்பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள இயலும் என அரசு தெரிவித்துள்ளது.

ரூ.2 கோடி செலவில் இணையத்தளம் தொடக்கம்; 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி!

அதே போல, கலிபோர்னியாவை சேர்ந்த முன்னணி நிறுவனமான கோர்ஸெரா நிறுவனம் என்ற நிறுவனத்துடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக 50,000 பேருக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் இது வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ரூ.20 கோடி மதிப்பில் தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் கட்டுமான பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.