முதலாளிக்கு பக்கவாதம் – வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை

 

முதலாளிக்கு பக்கவாதம் – வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை

தேனி

தேனியில் முதலாளிக்கு பக்கவாதம் ஏற்பட்ட வேதனையில் 70 வயது தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கோம்பை பி.ரெங்கநாதபுரத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி காளியப்பன்(70). இவர் கோம்பையை சேர்ந்த ஜெயராஜ் என்பவரிடம் கடந்த 50 ஆண்டுகளாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், ஜெயராஜ் மீது அதீத விசுவாசத்துடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜெயராஜுக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் வேதனை அடைந்த காளியப்பன், தனது முதலாளிக்கு இப்படி ஆகி விட்டதே என புலம்பி வந்துள்ளார்.

முதலாளிக்கு பக்கவாதம் – வேதனையில் கூலி தொழிலாளி தற்கொலை

காளியப்பனை அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்து வந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி மதுவில் விஷ மாத்திரைகளை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். மேலும், இந்த தகவலை செல்போனில் தனது மகள் கற்பகத்திடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், அங்குள்ள கால்வாய் கரை பகுதியில் உயிருக்கு போராடிய காளியப்பனை மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தன்ர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார் இந்த சம்பவம் பற்றி கோம்பை போலீலார் விசாரித்து வருகின்றனர்.