தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, செல்பி ஸ்பாட் திறப்பு!

 

தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, செல்பி ஸ்பாட் திறப்பு!

தேனி

சட்டமன்ற தேர்தலில், தேனி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வாக்களர்களிடையே மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

அதன்ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையம் நேரு சிலை அருகேயுள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக வாசகங்கள் அடங்கிய ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிருஷ்ணனுண்ணி பறக்கவிட்டார்.

தேனியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி, செல்பி ஸ்பாட் திறப்பு!

இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உள்ளிட்டோர் உடனிருநதனர். இதனிடையே, இளம் வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் “என் தேர்தல்” என்ற செல்பி பாதகை சமீபத்தில் திறக்கப்பட்டது.

இந்த நிலையில், செல்பி பாதகை முன்பு அதிகாரிகள், இளைஞகர்கள் என ஏராளமானோர் ஆர்வமுடன் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.