நீங்க SBI ‘டெபிட் கார்ட்’ வச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு!

 

நீங்க SBI ‘டெபிட் கார்ட்’ வச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு!

SBI டெபிட் கார்டு வைத்திருப்பவர்களும் EMI வசதியை பயன்படுத்தலாம் என எஸ்.பி.ஐ அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தீபாவளி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. இத்தகைய சூழலில் பண்டிகையை கொண்டாட முடியுமா? என்பதே நடுத்தர மக்களிடம் பெரிய கேள்வியாக இருக்கிறது.

நீங்க SBI ‘டெபிட் கார்ட்’ வச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு!

இந்த நிலையில், மிகப்பெரிய வங்கிகள் கூட கொடுக்காத சலுகையை, SBI தனது வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளது. எல்லா வங்கிகளிலும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களே EMI வதியை பயன்படுத்தி வரும் சூழலில், SBI வாடிக்கையாளர்கள் டெபிட் கார்டு மூலமாக தேவையான அளவிற்கு EMI வதியை பயன்படுத்தலாம் என அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நீங்க SBI ‘டெபிட் கார்ட்’ வச்சிருக்கீங்களா? இதோ உங்களுக்கான அசத்தல் அறிவிப்பு!

இந்த வசதி அனைத்து டெபிட் கார்டுகளுக்கும் கிடைக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கிளைகளில் இது குறித்த விவரங்களை கேட்டறிந்து கொள்ள வேண்டும் என்றும் SBI தெரிவித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், வீட்டு உபகரணங்கள் வாங்க பணம் இல்லையே என வறுத்தப்பட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களை, இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.