இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

இ.எம்.ஐ கட்டுவதில் இருந்து விலக்கு என்று அறிவித்துவிட்டு அதற்கு அநியாய வட்டி வசூலிக்கப்படுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கின. பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. அரசாங்கங்களே சம்பளக் குறைப்பில் ஈடுபட்டன. இந்த நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக ரிசர்வ் வங்கி சில அறிவிப்புகளை வெளியிட்டது.

இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

அதில், மூன்று மாதங்களுக்கு இ.எம்.ஐ கட்டத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் சம்பளதாரர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆனால், அவர்களுக்கு மூன்று மாத இ.எம்.ஐ-க்கு வட்டிக்கு வட்டி போட்டுக் கூடுதலாக பல மாதங்களுக்கு வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்தன. வட்டி வசூலிக்காவிட்டால் வங்கிகளை நடத்த முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது, அரசு உதவிகளை உதவியாக மட்டுமே செய்ய வேண்டும் என்று தெரிவித்தது. அரசு, ரிசர்வ் வங்கி முடிவெடுக்க உத்தரவிட்டது. ஆனாலும் அவர்கள் தங்கள் முடிவில் மாற்றம் செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.

இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் முதுகுக்குப் பின்னால் மறைந்து கொள்ளாமல், மத்திய அரசு சுயமாக முடிவெடுக்க வேண்டும். வணிக நலனில் மட்டுமே அக்கறை செலுத்தக் கூடாது. மக்கள்படும் துன்பங்கள் மீதும் மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும். தேசிய பேரிடராக அறிவித்துவிட்டால் அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இ.எம்.ஐ செலுத்த வேண்டாம் என்று அறிவிக்கப்பட்ட காலத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.

இ.எம்.ஐ விவகாரம்… ரிசர்வ் வங்கி பின்னால் மறையாமல் மத்திய அரசு முடிவெடுக்க நீதிமன்றம் அறிவுரை

மேலும், இது தொடர்பாக மத்திய அரசு புதிய மனுவை ஒரு வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அரசு வட்டி தள்ளுபடி செய்யப்படுமா அல்லது வட்டி வசூல் ரத்து செய்யப்படுமா என்பது பற்றி நீதிமன்றம் முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகத் தெரிவித்தனர்.