டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

 

டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

வட மாநிலங்களில் அறுவடை முடிந்த பிறகு காய்ந்த வைக்கோல்கள் எரிக்கப்படுவது வழக்கம். அதுமட்டுமில்லாமல், தீபாவளி பண்டிகையின் போது வெடிக்கப்படும் பட்டாசுகளின் புகையும் சேர்ந்து டெல்லி முழுவதுமே புகை மண்டலமாக காட்சியளிக்கும். கடந்த ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட புகை மண்டலம் மக்களை மிகுந்த அவதிக்குள்ளாக்கியது. இதனால் இதனைக் கட்டுப்படுத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

டெல்லியில் காற்று மாசை தடுக்க அவசர சட்டம்!

இந்த நிலையில்,காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம் விதிக்கவும் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் டெல்லியில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசை தடுக்க வாரியம் அமைக்கவும் அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசை தடுக்க அமைக்கப்பட உள்ள வாரியத்தில் அரசு துறைகள் மற்றும் மாநில அரசு பிரதிநிதிகள் உறுப்பினராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.