darbar
  • January
    26
    Sunday

Main Area

Main



அவசர கோலத்தில் அறிவிப்பு... ஃபாஸ்டேக் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி!

ஃபாஸ்டேக்
ஃபாஸ்டேக்

தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள போதிய அவகாசம் அளிக்காமல் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் வழங்காமல் வங்கிகள் அலைக்கழித்து வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

fastag

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு வசூல் செய்வார்கள் என்று தெரியாமலேயே டோல்களில் கட்டணம் செலுத்தி வருகின்றோம். டோல் கொள்ளையைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்தவர்களை இப்போது ஃபாஸ்டேக் பற்றி புலம்ப வைத்துவிட்டது மத்திய அரசு. டோல் பிளாசாக்களில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று என்று கடந்த நவம்பர் மாதம் திடீரென்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் வரிசையில் காத்திருக்காமல் விரைவாக டோல் பிளாசாவை கடக்கலாம் என்பது எல்லாம் நல்ல திட்டம்தான். ஆனால், எல்லா வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கிடைத்துவிட்டதா என்று உறுதி செய்யாமல் இந்த திட்டத்தை அறிவித்திருப்பதுதான் இப்போது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஃபாஸ்டேக் அறிமுகம் ஆகி பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இது பற்றிய விழிப்புணர்வு வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுத்தவில்லை. திடீரென்று டிசம்பர் 1ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிப்பு வெளிவந்த பிறகுதான் பலருக்கும் அப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியவந்தது. 
கடந்த நவம்பர் மாதம் வெளியான செய்திகளில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எத்தனை வாகனங்களில் ஃபாஸ்டேக் உள்ளது என்று ஆய்வு செய்தபோது, 30 சதவிகித வாகனங்களில் மட்டுமே அது இருப்பது தெரியவந்துள்ளது. மீதம் 70 சதவிகிதம் பேர் ஃபாஸ்டேக் பயன்படுத்தாத சூழலில், 70 சதவிகித வாகன ஓட்டிகளுக்கு ஃபாஸ்டேக் கிடைப்பதை உறுதி செய்யாமல் அவசர கோலத்தில் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

fastag

வாகன ஓட்டிகள் தங்கள் வண்டியின் ஆர்.சி புக், வண்டியின் புகைப்படம், தங்கள் வங்கிக் கணக்கு என அனைத்தையும் எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்று ஃபாஸ்டேக் வாங்கிக்கொள்ளலாம் என்று மிக ஈஸியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறிவிட்டது. ஆனால், ஃபாஸ்டேக் ஸ்டிக்கல் இல்லாததால் பிறகு வாருங்கள் என்று வங்கிகள் அலைக்கழிப்பதாக வாகன ஒட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். டிசம்பர் 15ம் தேதிக்குள் ஃபாஸ்டேக் ஒட்டவில்லை என்றால், அந்த வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஃபாஸ்டேக் தட்டுப்பாடு நிலவுவதால் இந்த திட்டத்தை சில மாதங்களுக்காவது ஒத்திவைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2018 TopTamilNews. All rights reserved.