ஆந்திராவில் மர்ம நோய் தாக்கியதற்கான இதுதான் காரணமாம்!!

 

ஆந்திராவில் மர்ம நோய் தாக்கியதற்கான இதுதான் காரணமாம்!!

ஆந்திராவில் மர்ம நோய் காரணமாக சுமார் 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏலூர் என்ற பகுதியில் பரவும் இந்நோயால் 400 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் 140 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் மேற்கு கோதவரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோயின் தாக்கம் குறித்து ஆந்திர மாநில தலைமைச் செயலாளர் நீலம் சாவ்னியிடம் தொலைபேசி வாயிலாக பேசிய மத்தியமைச்சர் கிஷன் ரெட்டி, நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தார். பாதிக்கப்பட்டோரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில் நோயாளிகளின் ரத்தத்தில் ஈயமும், நிக்கலும் கலந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து ஏலூர் பகுதிகளிலுள்ள தண்ணீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டன. அப்பகுதிக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டது.

ஆந்திராவில் மர்ம நோய் தாக்கியதற்கான இதுதான் காரணமாம்!!

இந்நிலையில் ஆந்திர மாநிலம் ஏலூரில் மர்ம நோய் தாக்கியதற்கு விவசாய நிலத்தில் பயன்படுத்தப்பட்ட பூச்சி மருந்தே காரணம் என எய்ம்ஸ் மருத்துவ ஆய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் உடலில் ஈயம், நிக்கல் எவ்வாறு கலந்தது? என பரிசோதனை தீவிரமாக நடைபெற்றுவருகிறது.