இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

 

இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

எலக்ட்ரிக் கார்களின் மீதான ஆர்வத்தை மக்களிடையே தூண்டும் வகையிலும், பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துடன் கர்நாடகா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. டெஸ்லா நிறுவனம் முதற்கட்டமாக பெங்களூருவில் தனது உற்பத்தி ஆலையைத் துவங்கவிருக்கிறது. அதன் முதல் அடியாக மூன்று இயக்குனர்களையும் நியமித்திருக்கிறது.

இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

இந்தியாவில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்துவருகிறது.

இந்திய நிறுவனமான ஓலா, உபெர், பவுன்ஸ், வோகோ உள்ளிட்ட நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களை இந்தியாவில் தயாரித்துவருகின்றன. இது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 1 சதவீதத்துக்கும் குறைவானதே.

இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

உற்பத்தி ஒருபுறம் இருந்தாலும் நுகர்வு குறைவாகவே இருந்தது. மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. இதற்காக உலகளவில் மிகவும் பிரபலமான மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் இருக்கும் டெஸ்லா நிறுவனத்தை இந்தியாவிற்கு அழைத்துவர மத்திய அரசு ஆர்வம் காட்டிவந்தது.

டெஸ்லாவின் சந்தை மதிப்பீடு, மக்கள் மத்தியில் அந்நிறுவனத்திற்கு இருக்கும் புகழ் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவிற்குள் இழுக்க டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன் நீண்ட நாள்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்தது.

டெஸ்லா மீதான நம்பிக்கையில் மக்கள் எலக்ட்ரிக் வாகனங்களில் ஆர்வம் காட்டுவார்கள், இந்தியாவின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என ஒரே கல்லில் மூன்று மாங்காய்களை அடிக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதில் பாதி வெற்றியும் கண்டுவிட்டது. மஸ்குக்குடன் ஒப்பந்தம் மேற்கொண்டது கர்நாடக அரசாக இருந்தாலும் பின்னால் மத்திய அரசு தான் ஊக்குவித்துக் கொண்டிருந்தது.

இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

பாதி வெற்றி என்று ஏன் குறிப்பிடப்படுகிறது என்றால், இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தளத்தை டெஸ்லா நிறுவனம் அமைக்க வேண்டும் என்பதே மத்திய அரசு மற்றும் கர்நாடகா அரசின் பிரதான நோக்கம்.

ஆனால், எலான் மஸ்க் பெங்களூருவில் உற்பத்தி ஆலையை மட்டுமே நிறுவ ஒப்புக்கொண்டுள்ளார். இது மத்திய அரசுக்கும் கர்நாடகா அரசுக்கும் சற்று ஏமாற்றம் தான். இருப்பினும், தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறியிருக்கின்றன.

இதனிடையே இந்தியாவில் அமையவிருக்கும் டெஸ்லா நிறுவனத்தின் மூன்று இயக்குனர்களை அந்நிறுவனம் நியமித்துள்ளது. வைபவ் தனேஜா, வெங்கட்ராம் ஸ்ரீராம், டேவிட் ஜான் ஃபைன்ஸ்டீன் ஆகிய மூவரும் இந்திய நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பார்கள்.

இந்தியாவில் கால் பதிக்கும் உலகின் நம்பர் 2 பணக்காரர்!

கடந்த வாரம் போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்திலிருந்த அமெசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை பின்னுக்குத் தள்ளி எலான் மஸ்க் முதல் இடத்தைப் பிடித்தார். ஆனால், திங்கட்கிழமை டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் சரிந்ததால் மஸ்க் மீண்டும் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.