எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

 

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், ட்விட்டர் பக்கத்தில் கொடுத்த லைக்கால் சென்னையை சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் 16 மணி நேரத்தில், ரூ.7.5 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது.

எலான் மஸ்க் செய்த வேலையால் எகிறிய முதலீடு

அமெரிக்காவிலேயே பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கை அசைத்தால் கூட மார்க்கெட்டில் சிறு ஏற்ற இறக்கங்களை காணலாம். இந்நிலையில் சென்னையை சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷின் பதிவுக்கு எலான் மஸ்க் ஒரு லைக் கொடுத்துள்ளார். இதனால் அந்நிறுவனம் 16 மணி நேரத்தில், ரூ.7.5 கோடி முதலீட்டை ஈர்த்துள்ளது. பிரிட்டனை சேர்ந்த சர்வதேச நிதியம், கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது.

சென்னையை சேர்ந்த கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம், ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்களை தயாரித்துவருகிறது. இந்நிறுவனத்தின் ட்ரோன்கள் ஊரடங்கு காலக்கட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினிகளை தெளிக்க உபயோகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டுவரும் மிகப்பெரிய சோலார் பேனல்களை சுத்தம் செய்து பராமரிக்கும் பணிகளை கருடா ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் தற்போது கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பான பதிவையே கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை தான் எலான் மஸ்க் லைக் செய்தார் என்பது குறிப்பிடதக்கது.