உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை; வழுக்கி விழுந்து உயிரிழப்பு!

 

உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை; வழுக்கி விழுந்து உயிரிழப்பு!

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் காயங்களுடன் சுற்றித் திரிந்த யானை சரிந்து விழுந்து உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிதுறை பகுதியில் உள்ளங்கால் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிந்தது. அந்த யானைக்கு சுமார் 20 வயது இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காயங்களுடன் இருந்த அந்த யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவெடுத்த அதிகாரிகள், அதனை பிடிக்க 2 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த காட்டு யானை; வழுக்கி விழுந்து உயிரிழப்பு!

அந்த கும்கி யானைகளை ஆற்றை கடக்கச் செய்து காயமடைந்த யானையை பிடித்த அதிகாரிகள், ஊசி செலுத்தி அதற்கு சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர், அந்த யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்தனர். இந்த நிலையில் காயமடைந்திருந்த அந்த யானை மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தது. கடந்த 2 நாட்களாக அப்பகுதி மழை பெய்து வந்ததால், சுமார் 15 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் யானை சரிந்து விழுந்து உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.