ஓசூர் அருகே காட்டு யானை மர்ம மரணம்: வனத்துறையினர் விசாரணை!

 

ஓசூர் அருகே காட்டு யானை மர்ம மரணம்: வனத்துறையினர் விசாரணை!

ஓசூர் அருகே 35 வயது மதிக்கத்தக்க காட்டு யானை உயிரிழந்தது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட யானைகள் இருந்து வருகின்றன. அந்த யானைகளுள் 2 மட்டும் உணவுக்காக துர்கம் வனப்பகுதியில் சுற்றித் திரிந்துள்ளன. அதில் ஒரு ஆண் யானை மட்டும் கவிபுரம் கிராமத்தின் விளைநிலத்தில் சுற்றித்திரிந்த நிலையில், அந்த யானை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது.

ஓசூர் அருகே காட்டு யானை மர்ம மரணம்: வனத்துறையினர் விசாரணை!

தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்த யானை உயிரிழந்தது எப்படி என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் கேரளாவில் கர்ப்பமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த யானை வெடிமருந்து கொடுத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து, விளைநிலங்களை சேதப்படுத்துவதாக யானைகள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. அதே போல, இந்த யானையும் கொல்லப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.