யானையை அடித்து துன்புறுத்திய பாகன் பணியிடை நீக்கம்! கலங்கவைக்கும் வீடியோ

 

யானையை அடித்து துன்புறுத்திய பாகன் பணியிடை நீக்கம்! கலங்கவைக்கும் வீடியோ

கோவை மேட்டுப்பாளையத்தில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் தேக்கம் பட்டியில் நடைப்பெற்றுவருகிறது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 26 கோவில் யானைகள் பங்கேற்றுள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவும் பங்கேற்றுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் யானை ஜெய்மால்யதாவை அதன் பாகன்கள் இருவர் கடுமையாக தாக்கும் காட்சியும், தாக்குதல் தாங்காமல் யானை பிளிறும் ஓசையும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதற்காக இந்த யானையை பாகன்கள் தாக்கினார்கள் என்பது தெரியவில்லை. இருந்தாலும் புத்துணர்வு முகாமில் நடைப்பெற்ற இந்த சம்பவம் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் அரசு உரிய விளக்கமும், நடவடிக்கையும் எடுக்க விலங்கின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

யானையை அடித்து துன்புறுத்திய பாகன் பணியிடை நீக்கம்! கலங்கவைக்கும் வீடியோ

இந்த சூழலில் வீடியோ வெளியானதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் யானையை அடித்து துன்புறுத்திய பாகன் வினில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.