முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை!

 

முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை!

மின்வாரியத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முன்களப்பணியாளர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் உழைத்து வருகிறார்கள். முழு ஊரடங்கு காரணமாக ஒட்டுமொத்த மக்களும் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இந்த சூழலில் அவர்களுக்கு 24 மணிநேரமும் மின்விநியோகம் தடைபடாமல் பார்த்துக்கொள்ளும் பணியை மின்வாரிய ஊழியர்களே மேற்கொண்டு வருகிறார்கள். இதில் பலரின் உயிர்களும் பறிபோகிறது.

முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை!

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் களப்பணியாளர்களாகப் பணியாற்றும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது. அதிலிலுள்ள தார்மீகத்தை உணர்ந்து நாம் தமிழர் கட்சி அதனை முழுமையாக ஆதரிக்கிறது. புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடர் காலங்களிலும், தற்போதைய கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது, களத்திலிறங்கி இரவு பகல் பாராது பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களின் பொறுப்புணர்வுமிக்கப் பெரும்பணியானது போற்றுதற்குரியதாகும்.

கொரோனா எனும் கொடுந்தொற்றால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இப்பேரிடர் காலத்தில் மக்கள் உயிர்காக்கப் போராடும் மருத்துவமனைகளுக்கும், ஆக்சிஜன் உற்பத்தி உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும், ஆரம்பச் சுகாதாரநிலையங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள், உணவகங்கள் போன்றவை தொய்வின்றி இயங்கவும், ஊரடங்கால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பாதிக்கப்படாமலிருக்கவும் உடனுக்குடன் மின் வழங்கலில் ஏற்படும் தடைகளைச் சரிசெய்து, மக்கள் நலப்பணியாற்றும் மின்வாரியத் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அரசின் பெருங்கடமையாகும்.

முதல்வர் ஸ்டாலினிடம் சீமான் வைத்த கோரிக்கை!

இப்பெருந்தொற்றுக் காலத்தில், இதுவரை ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட மின்வாரியத் தொழிலாளர்கள் உயிரிழந்தபோதும், அரசு அறிவித்துள்ள கொரொனா முன்களப்பணியாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய இழப்பீடு உள்ளிட்ட எவ்வித உதவிகளும் மின்வாரியத் தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

எனவே, தங்களது உயிரையும் பொருட்படுத்தாது மக்கள் நலப்பணியாற்றி வருகின்ற மின்வாரியத் தொழிலாளர்களின் அரும்பணியை அங்கீகரிக்கும் வகையில் மின்வாரியத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து உடனடியாக அரசாணை வெளியிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.