6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

 

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

வரும் மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்துக் கிடக்கிறார்கள். இது தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். விரைவில் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்றும் கூறியிருந்தார்.

6 மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

இந்த நிலையில், அடுத்த ஆறு மாதத்திற்குள் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மொத்தமாக 4.51 லட்சம் விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். பதிவு செய்தவர்களுக்கு மின்சார வாரியம் கடிதம் அனுப்பும். கடிதத்தை பெறுபவர்கள் 30 நாட்களுக்குள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், விவசாயத்திற்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் போர்க்கால அடிப்படையில் இந்த பணி நடைபெறும் என்றும் அவர் கூறினார்.