‘மின்சாரம் தாக்கி பெண் பலி’ தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மின்வாரியம் விளக்கம்!

 

‘மின்சாரம் தாக்கி பெண் பலி’ தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மின்வாரியம் விளக்கம்!

சென்னை அருகே மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், தான் வேலை பார்க்கும் வீட்டில் வேலையை முடித்து விட்டு கையில் உணவுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் மழை நீர் தேங்கி இருந்ததால், ஓரமாக செல்ல முயன்ற அந்த பெண் தவறுதலாக வெளியே கிடந்த மின் கம்பியை மிதித்த நிலையில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

‘மின்சாரம் தாக்கி பெண் பலி’ தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என மின்வாரியம் விளக்கம்!

மழைக்காலங்களில் மின் கசிவு இருப்பதால் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாகவும், வெளியே நடமாட அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியில் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

மாநகராட்சியின் தெருவிளக்கு மின்கம்பியை மிதித்ததால் தான் மின்சாரம் தாக்கி அந்த பெண் உயிரிழந்ததாகவும் மின் இணைப்பு பெட்டி வரை மின்சாரத்தை விநியோகம் செய்வதுதான் எங்கள் பணி என்றும் மற்ற அனைத்தும் அந்த பகுதியில் இருக்கும் ஊழியர்களின் பொறுப்பாகும் என்றும் கூறியுள்ளது.