“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடினால் தான் கொரோனாவை வெல்ல முடியும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 31,892 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15 லட்சத்து 31ஆயிரத்து 377ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,056ஆக அதிகரித்துள்ளது.இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் 6 முதல் 10 மணிவரை மட்டுமே இயங்கும். நாளைமுதல் தேநீர் கடைகள் செயல்பட அனுமதியில்லை . ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு , மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் செல்ல இ-பாஸ் கட்டாயம் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

“24 மணிநேரமும் மின்மயானத்தை பயன்படுத்த முடியாது” : சென்னை மாநகராட்சி ஆணையர்

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, “24 மணிநேரமும் மின் தகன மயானம் இயந்திரங்களை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் அதில் பழுது ஏற்படும். அதனை அவ்வப்போது பராமரிக்க வேண்டும். 16 மருத்துவர்கள் கொண்ட குழு வீட்டில் தனிமையில் இருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து போராடினால் தான் கொரோனாவை வெல்ல முடியும்” என்றார்.