பேருந்துகளில் திருக்குறள் இருக்கும் இடத்தில் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்”

 

பேருந்துகளில் திருக்குறள் இருக்கும் இடத்தில் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்”

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே எஞ்சியுள்ளன. அதனால் பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. தற்போது அனைத்து கட்சிகளிலும் கூட்டணி பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், தேர்தல் நேரத்தில் அனைத்தும் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தேர்தல் ஆணையமும் சட்டமன்ற தேர்தலுக்கான தனது பணியை தொடக்கி விட்டது. வரும் டிசம்பர் மாதம் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியாகும் என்றும் அந்த மாதத்திற்குள் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், பிழை திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியாகும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. ஒருபுறம் திமுகவும், மறுபுறம் ஆளும் அதிமுகவும் விறுவிறுப்பாக தேர்தல் பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். அதேபோல் கூட்டணி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் நடந்துகொண்டே இருகிறது. மக்களை கவர புதுபுது திட்டங்களையும், அறிவிப்புகளையும் அதிமுக அரசு வெளியிட்டு கொண்டிருக்கிறது.

பேருந்துகளில் திருக்குறள் இருக்கும் இடத்தில் “மக்களால் நான் மக்களுக்காகவே நான்”

இந்நிலையில் திருக்குறள் மட்டுமே இடம்பெற்றுவந்த சென்னை மாநகர புதிய பேருந்துகளில் திருக்குறளுடன், “மக்களால் நான் மக்களுக்காகவே நான் – புரட்சித்தலைவி அம்மா” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. இதுவும் வாக்கு பெற புது யுத்தியாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிமுக அமைச்சர்கள் எம்.ஜி. ஆர்., ஜெயலலிதாவின் பெயரை சொல்லி வாக்கு கேட்கும் உரிமை தங்களுக்கே உள்ளது என கூறி வருகின்றனர்.