“செம ட்விஸ்ட்” அதிமுக புகார்; கொளத்தூரில் தேர்தல் ரத்து?… எப்போ வேணும்னாலும் ஆர்டர் வரலாம்!

“செம ட்விஸ்ட்” அதிமுக புகார்; கொளத்தூரில் தேர்தல் ரத்து?… எப்போ வேணும்னாலும் ஆர்டர் வரலாம்!

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றோடு நிறைவடைந்த நிலையில், தேர்தல் பணிகள் துரித்தப்படுத்தப்பட்டுள்ளன. பிரச்சாரத்துக்கு நேற்றே கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் பணப் பட்டுவாடா வேலைகளில் பரபரப்பாக இயங்கின. தேர்தல் ஆணையத்திடம் ஏற்கெனவே பல புகார்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

“செம ட்விஸ்ட்” அதிமுக புகார்; கொளத்தூரில் தேர்தல் ரத்து?… எப்போ வேணும்னாலும் ஆர்டர் வரலாம்!

நேற்றும் பறக்கும் படையினர் அதிமுக, திமுக, பாமக, பாஜக என யார் யாரெல்லாம் பணப் பட்டுவாடா செய்தார்களோ அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சூழலில் இன்று காலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் புகார் ஒன்றை கொடுத்து பரபரப்பைக் கிளப்பினார். சேப்பாக்கம்–திருவல்லிக்கேணி, திருவண்ணாமலை, காட்பாடி, திருச்சி மேற்கு, கொளத்தூர் ஆகிய ஐந்து தொகுதிகளில் திமுக பணப்பட்டுவாடா செய்ததாகப் புகார் தெரிவித்து தேர்தலை ரத்துசெய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

“செம ட்விஸ்ட்” அதிமுக புகார்; கொளத்தூரில் தேர்தல் ரத்து?… எப்போ வேணும்னாலும் ஆர்டர் வரலாம்!

இந்த பரபரப்புக்குப் பின் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, “பணப்பட்டுவாடா புகாரின் பேரில் குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் ” என்று சூசகமாக சொல்லியிருக்கிறார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர், திருச்சி மேற்கு, கரூர் திருவண்ணாமலை உள்ளிட்ட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.