• October
    19
    Saturday

Main Area

Main



மீண்டும் இந்தியா வென்றுவிட்டது: பிரதமர் மோடி ட்வீட்!

மோடி
மோடி

மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது என்று மோடி தெரிவித்துள்ளார். 

மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றன. இதையடுத்து இன்று  வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைத் தேசிய ஊடகங்கள் வெளியிட்டன. இதில் பாஜகவே பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.

modi

இந்நிலையில் கருத்துக் கணிப்பு உண்மை என்பது போலவே காலை முதலே பாஜக தனிப்பெரும்பான்மையுடன் 344 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 91 இடங்களிலும், மற்றவை 108 இடங்களிலும் முன்னிலை வைக்கிறது. இதனால் மீண்டும் மத்தியில் பாஜகவே ஆட்சியைக் கைப்பற்றுகிறது. இதன் காரணமாக இரண்டாவது முறையாக வரும் 26 ஆம்  தேதியன்று மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். இதனால் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, 'நாம் ஒன்றாக வளர்கிறோம். ஒன்றாக நாம் ஒளிர்வோம். ஒன்றாக நாம் வலிமையான இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது'  என்று  பதிவிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.