• August
    25
    Sunday

Main Area

Main



தோல்வியை ஏற்றுக்கொண்டு பிரியா விடைக்கொடுக்கும் காங்கிரஸ் தலைவர்கள்! 

Election Results
Election Results
Loading...

உத்தரபிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று அம்மாநிலங்களின் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 300 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கிடைத்த படுத்தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நடிகருமான ராஜ் பாபர் தனது பதவியை ராஜினாமா செய்தார், அதேபோல் ஒடிஷாவின் காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக்கும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இருவரும் அவர்களது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு அனுப்பிவைத்தனர். உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மட்டும் ரேபரேலி தொகுதியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 178 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.