“தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்” : ப.சிதம்பரம் பேட்டி!

“தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்” :  ப.சிதம்பரம் பேட்டி!

படிப்படியாகவே நிதிநிலையை சீரமைக்க முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

“தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்” :  ப.சிதம்பரம் பேட்டி!

திமுக அரசு கடந்த மே மாதம் பொறுப்பேற்ற நிலையில் முதல் முறையாக கடந்த 13ஆம் தேதி முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது . சட்டப்பேரவையில். 13ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் 14ஆம் தேதி வேளாண்துறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார் . அதில் அதிமுக அரசு வைத்துச் சென்ற கடன்கள் உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்” :  ப.சிதம்பரம் பேட்டி!

இந்நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், “நிதிநிலை எந்த அளவுக்கு சீர்கெட்டுள்ளது என வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் தெளிவாக விளக்கியுள்ளார்; படிப்படியாகவே நிதிநிலையை சீரமைக்க முடியும், அதற்கு முதல்படி நிதிநிலை அறிக்கை. திமுகவின் சமுதாயப் பார்வையும், சமுதாய நோக்கும் பட்ஜெட்டில் அழுத்தமாகப் பதிந்துள்ளது; முதலமைச்சர், நிதியமைச்சர் மற்ற அமைச்சர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள். தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாகத்தான் நிறைவேற்ற முடியும்; தமிழ்நாடு பட்ஜெட்டில் திமுக-வின் சமுதாய பார்வை அழுத்தமாகவே உள்ளது; அதை பாராட்டுகிறேன்” என்றார்.