புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் நாளை முதல் விருப்ப மனு!

 

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் நாளை முதல் விருப்ப மனு!

புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், ஆளும் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது திடீர் திருப்பமாக இருந்தது. யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்ததால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், முதல்வர் நாராயணசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்புலத்தில், பாஜகவின் சதி திட்டம் இருப்பதாக அவர் கடுமையாக சாடியிருந்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் நாளை முதல் விருப்ப மனு!

இது குறித்து நேற்று புதுச்சேரியில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸின் கொடுமையான ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப் பட்டதாக கடும் விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறு புதுச்சேரி அரசியல் களம் அனல் பறந்துக் கொண்டிருக்கையில், மறுபுறம் தேர்தல் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4.30 மணிக்கு புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.

புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் நாளை முதல் விருப்ப மனு!

இந்த நிலையில், புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 5 வரை விருப்பமனு அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்ப மனு தாக்கலுக்கு பொது பிரிவினருக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.