“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்

 

“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்

தூத்தக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென, ஆட்சியர் செந்தில்ராஜ் கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, ஆசிரியர்கள், வருவாய் துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

“தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்” – தூத்துக்குடி ஆட்சியர்

இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயித்து 903 வாக்குசாவடிகளில் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளதாக கூறினார். மேலும், தலா 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், வருவாய் துறையினர் என பல்வேறு துறைகளை சேர்ந்த 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தேர்தல் பணியாற்ற உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனால், பணியாளர்கள் தங்களது நலனையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என கேட்டுகொண்டார். மேலும், வாக்குப்பதிவின்போது கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து அலுவலர்களும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார்.