காஷ்மீரில் தேர்தலா.. துணைநிலை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம்

 

   காஷ்மீரில் தேர்தலா.. துணைநிலை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம்

ஒரு மாநிலத்தில் அல்லது யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால் இந்திய தேர்தல் ஆணையம்தான் அதற்கான முயற்சிகளை எடுக்கும். தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி, வாபஸ் பெறும் தேதி, வாக்குகள் எண்ணப்படும் நாள் என அனைத்தையும் முடிவு செய்வது தேர்தல் ஆணையமே.

ஜம்மு காஷ்மீரில் தற்போதைய சூழலில் தேர்தல் நடைபெறும் என நாளிதழ்களில் செய்திகளும் துணைநிலை ஆளுநரின் அறிக்கைகளும் வெளிவந்திருப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.

   காஷ்மீரில் தேர்தலா.. துணைநிலை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம்

ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் ஜி.சி.முர்முவை மேற்கோள் காட்டி,‘’தொகுதி வரையறைக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்’’ என தி டிரிபியூன் இதழில்  ஜூலை 28, 2020 செய்தி வெளியானது.  இதேபோன்ற துணைநிலை ஆளுநரின் அறிக்கைகள் முன்பும், 18.11.2019 தேதியிட்ட தி ஹிந்து நாளிதழ்; 14.11.2019 நியூஸ்18 ; 26.6.2020 தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் ; 28.7.2020 எக்கானாமிக் டைம்ஸ் ஆகியவற்றில் வெளியாகியிருந்ததுஇதுபோன்ற அறிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது.  

தேர்தல் நேரம் உள்ளிட்ட அரசியல் சாசன விஷயங்கள் முற்றிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரம்புக்கு உட்பட்டது என துணைநிலை ஆளுநருக்கு நினைவூட்ட விரும்புவதாக அது கூறியுள்ளதுதேர்தல் தேதியை நிர்ணயிப்பதற்கு  முன்பாகதேர்தல் நடத்தும் இடத்தின் சூழல்வானிலைபிராந்தியஉள்ளூர் திருவிழாக்களால் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து பொருத்தமான அம்சங்களையும் ஆணையம் கவனத்தில் கொள்ளும்.  

   காஷ்மீரில் தேர்தலா.. துணைநிலை ஆளுநருக்கு தேர்தல் ஆணையம் ஆட்சேபம்

உதாரணத்துக்குதற்போதைய நிலையில்கோவிட்19 தொற்றுப் பரவல்புதிய கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளதுஇப்போதைய நிலையில்தொகுதி வரையறை விஷயமும் முடிவெடுப்பதில் முக்கிய அம்சமாக இருக்கும்இதேபோலமத்தியக் காவல் படைகளை அனுப்புவதற்கான போக்குவரத்துக்கு ரயில் பெட்டிகள் மற்றும் படைகளின் தயார் நிலை ஆகியவையும் முக்கிய அம்சங்களாகும்.  சம்பந்தப்பட்ட அனைவருடனும் உரிய ஆலோசனைகள் மேற்கொண்டுவிரிவாக மதிப்பீடு செய்த பின்னரேமூத்த அதிகாரிகள் பல்வேறு விஷயங்களை கவனத்தில் கொள்வார்கள்

தேர்தல் நடைபெறவுள்ள மாநிலத்துக்கு தேர்தல் ஆணையம் பயணம் மேற்கொண்டுசம்பந்தப்பட்ட அனைத்து பிரிவினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்தும்தேர்தல் ஆணையத்தின் அரசியல் சாசன உரிமையில் தலையிடுவதற்கு ஒப்பானது என்பதால்தேர்தல் ஆணையம் தவிர பிற அதிகார அமைப்புகள்இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பது  முறையாக இருக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.