இரண்டு மேலவை இடங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு

 

இரண்டு மேலவை இடங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு

கொரோனா நோய்த் தொற்று கடந்த நான்கு மாதங்களாக நாட்டையே முடக்கி வைத்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என உத்தேசமாகக் கூட தேதியை தீர்மானிக்க முடியவில்லை. பல மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதே கேள்விக்குறியாக இருந்தது. காரானம் கொரோனா நோய்த் தொற்று பரவல் எங்கும் குறைந்த பாடில்லை.

இந்நிலையில் மத்திய தேர்தல் ஆணையம் மேலவைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது.

இரண்டு மேலவை இடங்களுக்குத் தேர்தல் தேதி அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள மேலவைகளில், தலா ஒன்று வீதம், இரண்டு உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான இடைத்தேர்தல்களை நடத்துவதென தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது.

இதற்கான அறிவிக்கை 2020 ஆகஸ்ட் 6-ந் தேதியன்று வெளியிடப்படும். வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி – ஆகஸ்ட் 13 என்றும், மனுக்களைத் திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 17, தேர்தல் நாள் ஆகஸ்ட் 24 என்றும், வாக்கு எண்ணிக்கை அன்று மாலை 5 மணியளவில் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.