• April
    04
    Saturday

Main Area

Main



நடிகர் சங்க தேர்தலை நடத்தப்போவது இவர்தான்!!

Judge
Judge

நடிகர் சங்க தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இவர்களது பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக 6 மாத காலத்துக்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது, அந்த 6 மாதகால அவகாசமும் முடிவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது. தி நகரில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று மாலை இந்த கூட்டம் தொடங்கியது. தேர்தல் குறித்தும், தேர்தல் அலுவலர் குறித்தும் பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதியான பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நடிகர் சங்கம் நியமித்துள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படவுள்ளாதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதியே தேர்தல் தேதியை அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. 

2018 TopTamilNews. All rights reserved.