அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார்..

 

அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார்..

நாட்டின் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்க உள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் பொறுப்பேற்றதில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது ஆகும் வரை அந்தப் பதவியை அவர் வகிக்கலாம். பொதுவாக அதிக பணி மூப்பு பெற்ற தேர்தல் ஆணையரையே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிப்பது மரபாக உள்ளது. தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுனில் அரோராவின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார்..
சுனில் அரோரா

இதனையடுத்து தேர்தல் ஆணையர்களில் பணி மூப்பு அடிப்படையில் சுஷில் சந்திரா அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 13ம் தேதியன்று தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா இன்று பதவியேற்கிறார்..
மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக 2019 பிப்ரவரி 14ம் தேதியன்று தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். இன்று தலைமை தேர்தல் ஆணையராக பதவியேற்க உள்ளார். 2022 மே 14ம் தேதி வரை இந்த பதவியில் இருப்பார். இவரது தலைமையில், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.