மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்றுமுதல் அறிமுகம்!

 

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்றுமுதல் அறிமுகம்!

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இன்று மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்ய உள்ளது.

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்றுமுதல் அறிமுகம்!

1950-ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் க்யூ ஆர் கோடு வசதியுடன் உள்ள வாக்காளர் அட்டையை அறிமுகம் செய்தது. இதை தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசு கடந்த 2011ஆம் ஆண்டு ஜனவரி 25ஐ தேசிய வாக்காளர் தினமாக பின்பற்றுவதற்கு ஏதுவாக மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. இதனால் நாடு முழுவதும் தேசிய வாக்காளர் தினமாக ஜனவரி 25 கடைபிடிக்கப்பட்டு அன்று வாக்குரிமை குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.

மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்றுமுதல் அறிமுகம்!

அந்த வகையில் இன்று இந்தியா முழுவதும் 11 ஆவது தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொள்கிறார். அத்துடன் ஹலோ வாக்காளர்கள் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தள ரேடியோவையும் அவர் தொடங்கி வைக்கிறார்.முதல்முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர்களுக்கு தங்கள் மொபைல் எண்ணுடன் கூடிய இ- இபிக் என்ற மின்னணு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை இன்று முதல் வழங்கப்படுகிறது. இதில் புகைப்படம், வரிசை எண், பகுதி எண் மற்றும் க்யூ ஆர் கோடு வசதி இருக்கும். இதை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதற்கட்டமாக 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை புதிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 1 முதல் அனைத்து வாக்காளர்களுக்கும் இ- இபிக் வாக்காளர் அடையாள அட்டை பதிவிறக்கி கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.