சூடுபிடிக்கும் தேர்தல்களம் : இன்று சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு!

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : இன்று சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தேர்தல் ஆணைய குழு இன்று சென்னை வருகிறது .

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : இன்று சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு!

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது போலவே தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்ய ஆயத்தமாகி வருகிறது.வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் முடிவடைந்து இறுதி பட்டியல் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படப்படவுள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : இன்று சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு!

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையத்தின் குழு இன்று சென்னை வருகிறது . 2 நாட்கள் தமிழகத்தில் ஆய்வு செய்ய திட்டம் வகுத்துள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொளி மூலம் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. தலைமை செயலர், டிஜிபி , பிறதுறை செயலாளர்களுடன் நாளை உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற உள்ளது.

சூடுபிடிக்கும் தேர்தல்களம் : இன்று சென்னை வருகிறது தேர்தல் ஆணைய குழு!

முன்னதாக தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.