நவ.29 ஆம் தேதிக்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

 

நவ.29 ஆம் தேதிக்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக எம்.எல்.ஏ.க்கள் குடியாத்தம் காத்தவராயன், திருவெற்றியூர் கே.பி.பி.சாமி ஆகிய இரு எம்.எல்.ஏ.க்களும் கடந்த பிப்ரவரியில் காலமானார்கள். இதனை தொடர்ந்து ஜூன் மாதம் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வின் ஜெ.அன்பழகன், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

நவ.29 ஆம் தேதிக்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. அதில் பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படும். பீகார் சட்டமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 64 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் உரிய நேரத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவ.29 ஆம் தேதிக்கு முன்னதாகவே தமிழகத்தில் இடைத்தேர்தல்- தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் குடியாத்தம் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைந்து 6 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய வெளியிடவுள்ள அறிவிப்பில், பீகார் சட்டப்பேரவைத் தேர்தலை நவம்பர் 29 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கவேண்டியதிருப்பதால், நவம்பர் 29 ஆம் தேதிக்கு முன்னதாக திருவொற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ இறுதி தேதிகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.