ஜூன் 19ல் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

ஜூன் 19ல் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 18 இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஆந்திர பிரேதம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு தலா 4 இடங்களும், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்துக்கு தலா 3 இடங்களும், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 2 இடங்களும், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு மாநிலங்களவை இடமும் அடங்கும்.

ஜூன் 19ல் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

காலியாக உள்ள நாடாளுமன்ற மாநிலங்களவை (ராஜ்யசபா) இடங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுனால் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. இந்நிலையில், காலியாக உள்ள 18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் இம்மாதம் 19ம் தேதி நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜூன் 19ல் ராஜ்யசபா எம்.பி. தேர்தல்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

18 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் ஜூன் 19ம் தேதி அன்றே வாக்குகளும் எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக ராஜ்யசபா மற்றும் மேலவை இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் அன்றே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுவது வழக்கம்.