வாக்காளர் பட்டியலை 31-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

 

வாக்காளர் பட்டியலை 31-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

ஊரக உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளின் வாக்காளர் பட்டியலை 31-ம் தேதி வெளியிட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலை 31-ம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாட்டில் புதிதாக பிரிக்கப்பட்ட ஒன்பது மாவாட்டங்களில் செப்டம்பர் மாதத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி, தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடிகள் அமைத்தல் உட்பட அடிப்படை பணிகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் கையேடு வெளியிட்ட தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம்களையும் மாவட்ட வாரியாக நடத்தி முடித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட்ட தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலைக் கொண்டு குறிப்பிட்ட இந்த ஒன்பது மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளுக்கான வாக்காளர் பட்டியலை தயார் செய்து வருகின்ற 31ம் தேதி வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது . மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க உள்ள பொதுமக்கள், பெயர் நீக்கம் அல்லது திருத்தம் மேற்கொள்ளும் பொதுமக்களும் சட்டமன்ற வாக்காளர் பதிவு அலுவலரை தொடர்பு கொள்ளவும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.