கோவை காவல் அதிகாரிகளை கொத்தோடு தூக்கிய தேர்தல் ஆணையம்

 

கோவை காவல் அதிகாரிகளை கொத்தோடு தூக்கிய தேர்தல் ஆணையம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில், காவலர்களின் பெயர்களுடனேயே பண கவர்கள் கொடுக்கப்பட்டது தேர்தல் ஆணையம் நடத்திய சோதனையில் உறுதியானது.

கோவை காவல் அதிகாரிகளை கொத்தோடு தூக்கிய தேர்தல் ஆணையம்

இதேபோல் பல்வேறு இடங்களில் புகார் எழுந்ததை உன்னிப்பாக கவனித்துவந்த தேர்தல் ஆணையம், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தினகரன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைத்தது. மேற்கு மண்டல ஐ.ஜியாக அமல்ராய், கோவை எஸ்.பி.யாக செல்வ நாகரத்தினம் நியமித்து தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராமுக்கு பதிலாக தீபக் எம் தாமோர் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர காவல் ஆணையராக அருண் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள் அரசு, மத்திய மண்டல ஐகி ஜெயராம், மேற்கு மண்டல ஐஜி தினகரன் ஆகியோர் பணியிடமாற்றம் செய்தது மட்டுமின்றி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தங்களின் அனுமதியின்றி பணி இடங்களை ஒதுக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.