கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை

 

கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வன்முறை நடந்த வன்முறை நடந்த கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நுழைய தேர்தல் ஆணையம் 72 மணி நேரம் தடை விதித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் நேற்று 4ம் கட்டமாக 44 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நேற்று காலை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலைக் கலைக்கும் பணியில் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர்.

கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை
தேர்தல் ஆணையம்

அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.
இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். இந்த வன்முறை சம்பவத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை.. தேர்தல் ஆணையம் நடவடிக்கை
அமைதி காலம்

வன்முறை நடந்த கூச்பெஹார் மாவட்டத்துக்குள் அனைத்து கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நுழைய 72 மணி நேரம் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர வரும் 17ம் தேதி நடைபெற உள்ள 5ம் கட்ட தேர்தலுக்கான அமைதி காலத்தை 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. பொதுவாக தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும். இந்த காலத்தை அமைதி காலம் என்று கூறப்படுகிறது. தற்போது இதனை 72 மணி நேரமாக உயர்த்தியுள்ளது. இதன்படி, தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வரும்.