‘ஸ்டாலின் வர்றாரு..விடியல் தர போறாரு’ : விளம்பரத்துக்கு கட்டுப்பாடு!

‘ஸ்டாலின் வர்றாரு..விடியல் தர போறாரு’ : விளம்பரத்துக்கு கட்டுப்பாடு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தினத்தன்றே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு விட்டன. அதன் படி, பல இடங்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல், வாக்களிப்பதற்காக அரசியல் கட்சிகள் பொருட்களை விநியோகிக்க முற்படுவதால் தேர்தல் ஆணையம் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து வருகிறது.

‘ஸ்டாலின் வர்றாரு..விடியல் தர போறாரு’ : விளம்பரத்துக்கு கட்டுப்பாடு!

அதே போல அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களின் ஒவ்வொரு கட்ட நகர்வுகளுக்கும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இன்று கன்னியாகுமரி, தேங்காய்ப்பட்டினத்தில் ராகுல் காந்தி படகு சவாரி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் அதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்த திடீர் திருப்பமாக அமைந்தது. இந்த நிலையில், ஸ்டாலின் வர்றாரு விடியல் தர போறாரு என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

‘ஸ்டாலின் வர்றாரு..விடியல் தர போறாரு’ : விளம்பரத்துக்கு கட்டுப்பாடு!

இது தொடர்பாக திமுகவுக்கு தேர்தல் ஆணையத்துக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ஸ்டாலின் வர்றாரு விடியல் தர போறாரு என்ற விளம்பர பதாகை வைக்க விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் விளம்பரம் குறித்த உண்மைத் தன்மைக்கு அந்த விளம்பரத்தை வெளியிட்டுபவர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.