ஆன்லைன் வேட்புமனு, தபால் வாக்கு… என புதிய தேர்தல் வழிகாட்டுதல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!

 

ஆன்லைன் வேட்புமனு, தபால் வாக்கு… என புதிய தேர்தல் வழிகாட்டுதல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!


கொரோனா தொற்று காலத்தில் நடைபெற உள்ள தேர்தல், இடைத் தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடந்தாக வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். பல மாநிலங்களில் உறுப்பினர்கள் மறைவு காரணமாக காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள், நாடாளுமன்ற தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

ஆன்லைன் வேட்புமனு, தபால் வாக்கு… என புதிய தேர்தல் வழிகாட்டுதல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!


கொரோனா பாதிப்பு காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. அதே நேரத்தில், குறிப்பிட்ட காலத்துக்குள் தேர்தலை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயத்திலும் ஆணையம் உள்ளது. இதைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் கட்சிகள், வாக்காளர்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், தேர்தல் நடக்கும் நாளில் ஒருவருக்கு கொரோனா இருந்தால், அரசு முகாம்கள் அல்லது வீடுகளில் சுய கண்காணிப்பிலிருந்தால் அவர்கள் தபால் மூலம் தங்கள் வாக்குகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக தேர்தல் பணியில் உள்ளவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா தடுப்பு அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்கும் தபால் ஓட்டு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்கு செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் வேட்புமனு, தபால் வாக்கு… என புதிய தேர்தல் வழிகாட்டுதல் வெளியிட்ட தேர்தல் ஆணையம்!


தேர்தல் பிரசாரத்தின் போதும், வாக்கு சேகரிப்பின் போதும் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடும் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மிகப்பெரிய அரங்குகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பின்பற்றி நிகழ்ச்சிகள் நடத்தலாம். ஆன்லைனிலேயே வேட்பு மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்படும். வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போது ஐந்து பேருக்கு மேல் செல்லக் கூடாது. இதில் காவலர்கள் எண்ணிக்கை சேராது” என்பது உள்பட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
பீகார் சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.