கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்த தயார் – தேர்தல் ஆணையர்

 

கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்த தயார் – தேர்தல் ஆணையர்

கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்த தயாராக இருப்பதாக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பால் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், அண்மையில் காலமானார். அதனால் கன்னியாகுமரி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. சட்டவிதிப்படி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்த தயார் – தேர்தல் ஆணையர்

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, ‘சட்டவிதிகளின் படி பிப்ரவரி மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது, கன்னியாகுமரியில் தேர்தல் நடத்த தயார் நிலையில் தேர்தல் ஆணையம் இருக்கிறது’ என தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் நடத்த தயார் – தேர்தல் ஆணையர்

மேலும், கொரோனா பாதிப்பு நீடித்தால் தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் தபால் வாக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.