‘ஒரே கட்டமாக தேர்தல்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்’ – சுனில் அரோரா பேட்டி!

 

‘ஒரே கட்டமாக தேர்தல்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்’ – சுனில் அரோரா பேட்டி!

தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என அனைத்து கட்சிகளும் கோரிக்கை விடுதிருப்பதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.

‘ஒரே கட்டமாக தேர்தல்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்’ – சுனில் அரோரா பேட்டி!

சென்னையில் கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குச்சாவடி எண்ணிக்கை 68 ஆயிரத்திலிருந்து 93 ஆயிரமாக அதிகரிக்கப்படும். கொரோனா காரணமாக வாக்குச்சாவடி மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதோடு வாக்குப்பதிவு நேரமும் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்படும். பணப் பட்டுவாடாவை தடுக்க இரண்டு சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள். வாக்காளர்களுக்குப் பணம் பரிசுப் பொருள் கொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கூறினார்.

‘ஒரே கட்டமாக தேர்தல்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்’ – சுனில் அரோரா பேட்டி!

தொடர்ந்து, தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிகிறது என்றும் தமிழக சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள், பெண்கள், முதியோர்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார். 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு அளிப்பது பற்றி ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவிப்பதாகவும் கூறிய அவர், ஒரே கட்டமாக தேர்தல் நடத்த அரசியல் கட்சிகள் அனைத்தும் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரிவித்தார்.

‘ஒரே கட்டமாக தேர்தல்.. கூடுதலாக 25,000 வாக்குச்சாவடிகள்’ – சுனில் அரோரா பேட்டி!

மேலும் வாக்குப்பதிவு முடிந்து இரண்டு நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் சுங்க இலாகா அதிகாரிகளின் செயல்பாடுகளில் திருப்தி அளிக்கவில்லை என அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும் படைகளைப் பிரித்து அனுப்புவது பற்றி மத்திய பாதுகாப்பு படை முடிவு செய்யும் என்றும் கூறினார்.

விழாக்காலம், மாணவர்களின் தேர்வை கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி இறுதி செய்யப்படும் என்றும் சட்டப்பேரவை தேர்தலுடன் கன்னியாகுமரி இடைத்தேர்தலும் நடத்தப்படும் என்றும் சுனில் அரோரா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.