தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் தேர்தல் ஆணையம் தனது தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் என்று தெரிகிறது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது போலவே தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை செய்ய ஆயத்தமாகி வருகிறது.

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

முன்னதாக வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணிகள் கடந்த 2 மாத காலமாக வார இறுதி நாட்களில் நடைபெற்றது. இதற்கான இறுதி பட்டியல் வரும் ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்படும்.

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

இந்நிலையில் தேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அவர்களது சொந்த மாவட்டங்களில் நியமிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!

ஆறு மாத காலத்திற்குள் ஓய்வுபெறுவோரை தேர்தல் பணிக்கு நியமிக்க கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையம் கேரளா, மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.