உள்ளாட்சித் தேர்தல்; புகார் எண்கள் அறிவிப்பு!

 

உள்ளாட்சித் தேர்தல்; புகார் எண்கள் அறிவிப்பு!

உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்து புகாரளிக்க தேர்தல் ஆணையம் புகார் எண்களை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. வரும் 22ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவடைகிறது. 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் திரும்பப்பெறுவதற்கான கடைசி நாள். அதற்கு பிறகு வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்; புகார் எண்கள் அறிவிப்பு!

தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. கட்சி சம்பந்தப்பட்ட பேனர்கள் போஸ்டர்கள் என அனைத்தும் அகற்றப்பட்டுவிட்டன. தேர்தலை எதிர்நோக்கி தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இது. முக்கியம் வாய்ந்த தேர்தலாக பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் வழக்கம் போல, வேலைகளை காட்டுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள, பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம் என்றும் சென்னை மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் புகார் மையம் அனைத்து நாட்களிலும் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளது.